கல்லூரியின் நிகழ்வுகள் – 2011
............................................................................................
கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் இடம்பெயர்வு காரணமாக இம்முறை கல்லூரி தினம் எளிமையாக கொண்டாடப்பட்டது.
இல்ல விளையாட்டுப்போட்டி
கனிஸ்ட,
சிரேஸ்ட பிரிவு மாணவர்களிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள்
இரு பிரிவாகவும் வெகு விமர்சையாகவும் நடாத்தப்பட்டது
பிரியாவிடை – ஆசிரியர்களிற்கு
2010 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற 30 ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்
கோவில் திருவிழா
கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த உற்சவ திருவிழாவில் கல்லூரிக்கான திருவிழா வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது.
பிரியாவிடை – உயர்தரமாணவர்
2011 ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றும் உயர்தரமாணவர்களிற்கான பிரியாவிடை வைபவம் கல்லூரியின் கலையரங்கத்தில் கலை நிகழ்வுகளுடன் கூடிய இரா போசன விருந்தாக நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக திரு.செளந்தர்ராஐன் (மாகாண கல்வித் திணைக்களம்),
திருமதி.ஜெயபாலினி (மெதடிஸ் பெண்கள் கல்லூரி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
சுவாமி விபுலாநந்தர் நினைவு தினம்
கல்லூரி அதிபர் தலைமையில் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அதிபர், உப அதிபர், பிரதி அதிபர், ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர் மற்றும் சிரேஸ்ட ஆசிரியர்கள் விபுலானந்த சுவாமிகளின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கெளரவித்தனர். தொடர்ந்து கலைப்பிரிவு மாணவர்களால் நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டது
வாணி விழா